தமிழ்நாடு

சென்னையில் வீடுகள் விலை 10-20% வரை அதிகரிக்கும்..!

Published

on

சென்னையில் வீடுகள் விலை 10% முதல் 20 வரை அதிகரிக்கும் என கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக ஸ்டீல், சிமெண்ட், காப்பர் வையர், ஸ்விட்ச் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப் பணியாளர்களின் கூலி உயர்வு போன்ற காரணங்களுக்காக வீடுகளின் விலை உயருகிறது என FAIRPRO 2023 அழைப்பாளர் பி.குருதிவாஸ் தெரிவித்துள்ளார்.

Property prices in Chennai to go up by 10-20 Percent: Developers

கடந்த 5 ஆண்டுகளாக விற்கப்படாத சொத்துக்களின் விலை மிகக் குறைவாக உள்ளது.

அதே நேரம் புதிய வீடுகளின் விலை சென்னை முழுவதும் அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் வீட்டுக் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைவாக இருந்தன. இப்போது அவையும் உயர்ந்துள்ளதால் வீட்டு விலையுடன் சேர்த்து வீட்டுக் கடன் மீதான வட்டியையும் மக்கள் கூடுதலாகச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

seithichurul

Trending

Exit mobile version