தமிழ்நாடு

போதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள் பறிமுதல்: எச்சரிக்கும் தமிழக போக்குவரத்து போலீசார்!

Published

on

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான சாலை விபத்து மரணங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த விபத்துகள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் நடக்கின்றன. இந்நிலையில் இவ்வாறு மதுபோதையில் வாகனம் ஓட்டினால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

#image_title

சாலை விபத்து மற்றும் மரணங்களை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தற்போது ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளனர் போக்குவரத்து போலீசார். அதாவது, போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராத தொகை கட்டாவிட்டால், வாகனங்கள் அல்லது அசையும் சொத்துக்களான நகைகள், மொபைல், வாட்சுகள், லேப்டாப் போன்றவை பறிமுதல் செய்யப்படும்.

போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், போதையில் வாகனம் ஓட்டும் நபருடன் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் பத்தாயிரம் அபராதம் கட்ட வேண்டும். இந்த அபராத தொகை கட்டாதவர்களின் வாகனங்கள் அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துகளோ நீதிமன்றம் மூலமாக பறிமுதல் செய்யப்படும்.

நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். ஆனால் சவாரி செல்லும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version