சினிமா செய்திகள்

நவரசா- ‘ப்ராஜெக்ட் அக்னி’ குறும்படம் முழு நீள திரைப்படம் ஆகிறதா?

Published

on

நவரசா ஆந்தாலஜியில் இடம் பெற்றிருந்த ‘ப்ராஜெக்ட் அக்னி’ குறும்படம் முழு நீள திரைப்படம் ஆக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது போல ஹின்ட் கொடுத்துள்ளார் அதனது இயக்குநர் கார்த்திக் நரேன்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் நவரசா ஆந்தாலஜியில் இடம் பெற்றிருந்த படம் ‘ப்ராஜெக்ட் அக்னி’. இந்தக் குறும்படத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, பிரசன்னா, பூர்ணா ஆகியோர் நடித்திருப்பர். நவரசா வெளியான அன்று ‘ப்ராஜெக்ட் அக்னி’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தனியாக ட்ரெண்ட் ஆனது.

இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து இயக்குநர் கார்த்திக் நரேன் இதை முழு நீளப் படமாக்கலாம் என்றும் அதே நடிகர்களை வைத்தே மீண்டும் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. காரணம், ட்விட்டரில் கார்த்திக் நரேன், “ப்ராஜெக்ட் அக்னி-க்கு ரசிகர்கள், ஊடகங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா மற்றும் கல்கியின் பயணங்கள் இப்போது தான் தொடங்கி உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ப்ராஜெக்ட் அக்னி முழு நீள படமாக ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version