இந்தியா

மாட்டிறைச்சி தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்கு தற்போது கைது!

Published

on

கடந்த 2017-ஆம் ஆண்டு மாட்டுக்கறி உண்ணுவதற்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மிருகவதை தடை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வந்தது மத்திய அரசு. இந்த சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜீத்ராய் ஹன்ஸ்டா என்ற பேராசிரியர் தனது ஃபேஸ்புக்கில், பழங்குடியின மக்கள் பாரம்பரியமாக மாட்டிறைச்சியை உண்கின்றனர். மாட்டிறைச்சி எங்கள் கலாச்சார உரிமை. இந்து மக்களின் பழக்க வழக்கங்கள் பழங்குடியினருக்குப் பொருந்தாது என்று கூறியிருந்தார்.

இதனை எதிர்த்து, பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி அமைப்பினர் காவல் துறையில் புகார் அளித்தனர். ஆனால் இரண்டு வருடமாக இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை தற்போது தேர்தலுக்கு பின்னர், நேற்று முன்தினம் பேராசிரியர் ஜீத்ராய் ஹன்ஸ்டாவைக் கைது செய்தனர்.

(IPC) 153(A), 295A, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் மத உணர்ச்சிகளை அவமதித்தது, கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்தது போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின்போது பழங்குடியினரின் வாக்குகளை பெற அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார் என குற்றம் சாட்டப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version