சினிமா செய்திகள்

சீனுராமசாமியை நம்பும் தயாரிப்பாளர்கள்!

Published

on

வெற்றியோ, தோல்வியோ மண் சார்ந்த நல்ல சினிமாவை கொடுக்க எத்தனிக்கும் இயக்குநர்களில் சீனுராமசாமியும் ஒருவர். அவர் இயக்கத்தில் உதய்நிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான கண்ணே கலைமானே படம் படு தோல்வியை சந்தித்துள்ளது.

தர்மதுரை படம் பெற்ற வெற்றியை கண்ணே கலைமானே படம் பெற முடியாததற்கு நடிகர்கள் மற்றும் பழைய கதை தேர்வு தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கண்ணே கலைமானே படம் வெளியாகும் முன்னமே, விஜய்சேதுபதியை வைத்து மாமனிதன் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய சீனுராமசாமி, அதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சீனு ராமசாமி இயக்கத்தில் அடுத்த புதிய படத்திற்கான அறிவிப்பும் இப்போதே வெளியாகி உள்ளது.

இயக்குநர் சர்ஜன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ் நடிப்பில் வெளியாகி தோல்வியடைந்த எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தை தயாரித்த டைம்லைன் சினிமாஸ், சீனு ராமசாமியின் புதிய படத்தை தயாரிக்க முன் வந்துள்ளனர். தற்போது, அசோக் செல்வன் நடிக்கும் ரெட்ரம் படத்தை டைம்லைன் சினிமாஸ் தயாரித்து வருகிறது.

அந்த படம் முடிந்தவுடன் டைம்லைன் சினிமாஸின் மூன்றாவது தயாரிப்பு பட்மாக சீனு ராமசாமியின் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கான நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version