சினிமா செய்திகள்

’எனிமி’ பட அப்டேட் கொடுத்தவரை ஒருமையில் திட்டிய நெட்டிசன்: தயாரிப்பாளர் பதிலடி

Published

on

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’எனிமி’. ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் நடந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’எனிமி’ படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் மீதி 10 சதவீத படப்பிடிப்பு சென்னையில் நடைபெற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்

மேலும் இந்த படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறியதை அடுத்து விஷால் மற்றும் ஆர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஒரு குசும்புக்கார நெட்டிசன் ’உன்னிடம் இப்போது எனிமி படத்தின் அப்டேட்டை யார் கேட்டது என்று ஒருமையில் கூறியிருந்தார். இதனை அடுத்து தயாரிப்பாளர் வினோத் குமார் அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது: நக்கல் நையாண்டி எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ, புடிக்கலைன்னா வராத, நல்ல பதில் கிடைக்கும் பாத்துக்கோ. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கோ’

 

 

 

seithichurul

Trending

Exit mobile version