சினிமா செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கு கொரோனா தொற்று!

Published

on

திரைப்பட தயாரிப்பாளரும், வேல்ஸ் கல்விக் குழுமத் தலைவருமான ஐசரி கணேஷூக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐசரி கணேஷூக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்து வந்ததை அடுத்து, அவர் செய்துகொண்ட கொரோனா தொற்று சோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

எனவே கொரோனா தொற்று சிகிச்சைக்காகச் சென்னை அப்பலோ மருத்துவமனை கிளை ஒன்றில் சிகிச்சைக்காக ஐசரி கணேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகல்கள் கூறுகின்றன.

ஐசரி கணேஷூக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அண்மையில் வெளியாகிப் பெறும் வெற்றியைப் பெற்ற எல்கேஜி, கோமாளி ஆகிய படங்களை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் இண்டர்னேஷனல் பிளிம்ஸ் நிறுவனம் சார்பாகத் தயாரித்தும் இருந்தார்.

Trending

Exit mobile version