சினிமா செய்திகள்

‘தளபடி 63’ போஸ்டர் ரெடி; அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பாளர்!

Published

on

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத தளபதி 63 படத்தின் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தெறி, மெர்சல் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க, அவரது ஆஸ்தான பாடல் ஆசிரியரான விவேக்கும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளார்.

படம் தீபாவளிக்கும் வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “விஜயின் போஸ்டர்களில் எனக்குப் பிடித்தது இது. எனது அலுவலகத்திலும் இது உள்ளது. அடுத்த போஸ்டர் எங்களது பேனரில் விரைவில்” என்றும் பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version