சினிமா செய்திகள்

சின்னப்பொண்ணு, ராஜூ ஜெயமோகனை வச்சு செய்யும் பிரியங்கா: 3வது புரமோ வீடியோ!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரமோவில் சின்ன பொண்ணு, தாமரைச்செல்வி மற்றும் ராஜூ ஜெயமோகன் ஆகிய மூவரையும் பிரியங்கா வச்சு செய்யும் காட்சிகள் இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான பிரியங்கா ஆரம்பம் முதலே அசத்தி வருகிறார் என்பதும் முதல் நாளில் அவர் கமல்ஹாசனுடன் அறிமுகமானதிலிருந்து பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வீட்டையே கலகலப்பாக வைத்துக் கொண்டிருக்கும் பிரியங்கா இன்று ராஜூ ஜெயமோகன், சின்னப்பொண்ணு மற்றும் தாமரைச்செல்வி ஆகிய மூவரும் பேசுவதை அவர்களது உதடுகளிலிருந்து கண்டுபிடித்து காமெடியாக தன்னைச் சுற்றி உள்ளவர்களும் கூற, அதை கேட்டு மற்றவர்கள் சிரித்துக் கொண்டிருக்கும் காட்சி உள்ளது.

அந்த நேரத்தில் திடீரென பிக்பாஸ் குரல் ஒலிக்கிறது. அதில் பிரியங்கா சரியாக மைக்கை மாட்ட வேண்டும் என்று கூற அதையும் காமெடியாக எடுத்துக் கொண்ட பிரியங்கா ஓகே பிக்பாஸ் என்று கூறுவது பிக்பாஸை பிரியங்கா ஒரு ஆளாகவே மதிக்கவில்லை என தெரிகிறது.

மொத்தத்தில் நெட்டிசன்கள் பார்வையில் ப்ரியங்கா செம ஜாலியாக உள்ளார் என்பதும், அவரை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version