சினிமா

பிரியங்கா – நிக் ஜோனஸ் திருமணம் இந்த அரண்மனையில் தான் நடக்கிறதா?

Published

on

விஜய்யின் தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக முன்னேறினார். தற்போது, ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10வயது குறைவான நிக் ஜோனசுடன் பழகி வந்தார். பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க பாடகர் நிக் ஜோனசுக்கும், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், நிக் ஜோனஸ், தனது காதலி பிரியங்கா சோப்ராவை பார்க்க அடிக்கடி இந்தியா வருகிறார். கடந்த வாரம் வந்தவர் பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையை சுற்றி பார்த்தார். தங்களது திருமணத்தை உமைத் பவான் அரண்மனையில் நடத்த பிரியங்கா – நிக் ஜோனஸ் ஜோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version