தமிழ்நாடு

கன்னியாகுமரியில் போட்டியிடுகிறாரா பிரியங்கா காந்தி? பரபரப்பு தகவல்!

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலுக்கு தற்போது அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் எம்பி எச்.வசந்தகுமார் அவர்கள் மறைவை அடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி விருப்ப மனு அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த விருப்ப மனுவை காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் அளித்துள்ளதாகவும் அவர் குமரியில் பிரியங்கா காந்தியை போட்டியிட வைக்க கோரிக்கை விடப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் குமரியில் போட்டியிட பிரியங்கா காந்தி ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version