இந்தியா

சைலண்டாக அரசியல் செய்த பிரியங்கா காந்தி!

Published

on

உத்திரப்பிரதேச கிழக்குப் பகுதி பொறுப்பாளராகவும் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எளிமையான முறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் அவர் சைலண்டாக அரசியல் ஒன்று செய்துள்ளார்.

பண மோசடி வழக்கு ஒன்றுக்காக அமலாக்கப் பிரிவு அலுவலகத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா. இதனையடுத்து அவரை தனது காரிலேயே கூட்டி வந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் இறக்கிவிட்டார் பிரியங்கா காந்தி. ராபர்ட் வத்ரா தன் மீதான வழக்குகளுக்காக அரசின் விசாரணை அமைப்பின் முன் ஆஜராவது இதுவே முதல் முறையாகும்.

ராபர்ட் வத்ரா விசாரணைக்கு ஆஜராகியிருக்கும் தகவல் உடனடியாக ஊடகங்களுக்கு பரவியது. இதனையடுத்து பிரியங்கா காந்தி இந்த செய்தி முக்கியத்துவம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் அலுவலகத்துக்கு உடனடியாக வந்து தனது இருக்கையில் அமர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ராகுல் காந்தி துணைத் தலைவராக இருந்தபோது ஒதுக்கப்பட்ட அலுவலகம் தற்போது பிரியங்காவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தனது கணவர் ராபர்ட் வத்ரா முதன் முறையாக விசாரணைக்கு ஆஜராகியிருக்கும் செய்தி முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்பதால் நாளை பதவியேற்க இருந்த பிரியங்கா காந்தி இன்றே திடீரென பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரியங்காவின் அரசியல் ஆரம்பம்….

author avatar
seithichurul

Trending

Exit mobile version