தமிழ்நாடு

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது ப்ரியங்கா காந்தியா? விஜய் வசந்த்தா?

Published

on

தமிழக சட்டமன்ற தேர்தல் உடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றி பெற்றால் மீண்டும் மத்திய அமைச்சராக பொறுப்பு ஏற்க வாய்ப்புள்ளது என்பதால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் மறைந்த எச் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு கொடுத்துள்ளார். ப்ரியங்கா காந்தி குமரி தொகுதியில் போட்டியிட்டால் அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்வதோடு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார் என்றும் அதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள் என்ற நோக்கத்தில் விருப்பமனு கொடுத்துள்ளதாக கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக மறுத்து வருவதாகவும் திமுகவே போட்டியிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? அப்படியே ஒதுக்கினாலும், அந்த தொகுதியில் போட்டியிடுவது ப்ரியங்கா காந்தியா? அல்லது விஜய் வசந்த்தா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Trending

Exit mobile version