தமிழ்நாடு

பிரியங்கா காந்தியின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு: என்ன காரணம்?

Published

on

தமிழகத்தில் நாளை பிரச்சாரம் செய்ய இருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி திடீரென தனது திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் விஜய் வசந்த்தை ஆதரித்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மார்ச் 27ம் தேதி கன்னியாகுமரி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தனது பிரசார திட்டத்தை ரத்து செய்து பிரியங்கா காந்தியின் வருகை குறித்த ஏற்பாடுகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ஒத்தி வைக்கப்பட்டதாகவும் மார்ச் 27-ஆம் தேதி வருகை தர இருந்த அவர் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு வருவார் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரியங்கா காந்தியின் வருகை ஒத்திவைக்கப்படுவது ஏன் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தமிழக வருகையை உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அவர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நாளை கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version