தமிழ்நாடு

முதல்முறையாக பிரச்சாரத்திற்கு வரும் பிரியங்கா காந்தி: தமிழக காங்கிரஸார் உற்சாகம்

Published

on

முதல் முறையாக பிரியங்கா காந்தி தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வரவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து தமிழக காங்கிரஸார் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி அவ்வப்போது தமிழகம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர்கள் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நலம் காரணமாக சோனியா காந்தி தமிழகத்திற்கு வர மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு மார்ச் 27ஆம் தேதி பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்கு வருகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல் முதலாக பிரியங்கா காந்தி வரவிருப்பதால் தமிழக காங்கிரஸ் கட்சியினர் அவரை உற்சாகமாக வரவேற்க தயாராகி வருகின்றனர்.

மார்ச் 27ஆம் தேதி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்க்கு வாக்கு கேட்டு பிரியங்கா பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் அந்த தொகுதியின் பல இடங்களில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் மார்ச் 28ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாபெரும் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதில் கூட்டணி கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தமிழகத்திற்கு பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி அடுத்தடுத்த நாள் வரவிருப்பது காங்கிரசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version