கிரிக்கெட்

இந்திய வீராங்கனை அந்தரத்தில் பறந்து பிடித்த அபாரமான கேட்ச்: பிரியங்கா காந்தி பாராட்டு

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் அபாரமாக அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றதையடுத்து முதலில் பந்து வீசியது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.

அதன்பின் 178 என்ற இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி விளையாடி நிலையில் 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து மகளிர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இந்திய அணியின் ஹர்லீன் கெளர் தியோல் என்பவர் மிக அபாரமாக கேட்ச் ஒன்றை பிடித்தார். முதலில் அவர் பந்தை பிடித்து விட்டு, அதன்பின் பந்தை தூக்கிப்போட்டு விட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி அதன் பின் மீண்டும் பறந்து வந்து அந்த பந்தை பிடித்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தனது பாராட்டை தெரிவித்துள்ளார் என்பதும் இந்த பாராட்டுக்கு ஹர்லீன் கெளர் தியோல் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version