இந்தியா

துரியோதனனும் மோடியும் ஒன்னு: ஆவேசமடைந்த பிரியங்கா காந்தி!

Published

on

பிரதமர் மோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டு ஆவேசமாக பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் கிழக்கு பகுதியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி முன்னாள் பிரதமரும் ராகுல், பிரியங்காந்தியின் தந்தையுமான ராஜிவ் காந்தியை ஊழல்வாதி என விமர்சித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், உங்கள் தந்தை ஊழலில் முதன்மையானவர் என்ற பெயருடன்தான் மறைந்தார் என்று கூறினார். மோடியின் இந்த பேச்சு காங்கிரஸ் தலைவர்களை கோபமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் ஹரியானாவின் அம்பாலா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, பாஜகவினருக்கு வேறு எந்தக் காரணமும் கிடைக்காதால் எனது குடும்பத்தை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆணவத்தை இந்தியா ஒருபோதும் மன்னித்தது இல்லை. இதற்கு மாகாபாரதம் போன்ற வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

துரியோதனனுக்கும் இதுபோன்ற ஆணவம் இருந்தது. துரியோதனனின் ஆணவத்தை அவருக்கு உணர்த்த கிருஷ்ணன் முயன்றார். ஆனால் துரியோதனன், கிருஷ்ணரையே சிறைபிடிக்க நினைத்தார். அதுவே துரியோதனனுக்கு அழிவின் தொடக்கமாக இருந்தது. இப்போதைய சூழ்நிலைக்கு இது நன்கு பொருந்தும் என ஆவேசமாக மோடியை சாடினார் பிரியங்கா காந்தி.

seithichurul

Trending

Exit mobile version