தமிழ்நாடு

மாநில தலைவர்கள் கைவிட்டதால் பிரியங்கா காந்தியிடம் சரணடைந்த விஜய்வசந்த்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் பிரச்சாரம் செய்ய திமுக கூட்டணியை சேர்ந்த பெரிய தலைவர்கள் யாரும் வரவில்லை என்பதும், குறிப்பாக இந்த தொகுதியை எந்த தலைவரும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முக ஸ்டாலின் மற்றும் கேஎஸ் அழகிரி உட்பட பெரிய தலைவர்கள் யாரும் கன்னியாகுமரிக்கு பிரச்சாரம் செய்ய வரவில்லை. அவர்களுடைய நோக்கம் மாநில சட்டசபையில் வெற்றி பெறுவதிலேயே உள்ளது.

இதனால் இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கடும் அப்செட்டில் இருந்தார். ஆனால் அதே நேரத்தில் பாஜக இந்த தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழகத்தில் இருந்து ஒரு எம்பியை கண்டிப்பாக பெற்றுவிட வேண்டும் என்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவே இங்கு பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் பிரதமர் மோடியும் கன்னியாகுமரி வரவுள்ளார்.

இந்த நிலையில் மாநில தலைவர்கள் கன்னியாகுமரி தொகுதிப்பக்கம் வராததை நேரடியாக ராகுல் காந்தியிடம் விஜய் வசந்த் முறையிட்டதாகவும் இதனை அடுத்து அவருடைய ஏற்பாட்டின்படி பிரியங்கா காந்தி கன்னியாகுமரிக்கு வரவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரியங்கா காந்தியின் வருகை கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் பக்கம் திருப்பும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version