இந்தியா

உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி திடீர் கைது: காங்கிரஸார் அதிர்ச்சி!

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தில் சற்றுமுன்னர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் அவர்கள் போராட்டம் நடந்த பகுதிக்கு வந்தார். அப்போது பாஜகவினர் அவரை வரவேற்ற போது விவசாயிகள் திடீரென கூட்டத்திற்குள் புகுந்து கார்களை தாக்கினர்.

இந்த நிலையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ராஜேஷ் மிஸ்ரா அந்த காரில் இருந்ததாகவும் அவரது தூண்டுதலின் பெயரில் விவசாயிகள் மீது கார் மோதியதாகவும், இந்த விபத்தில் ஒரு விவசாயி மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டை உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மறுத்துள்ளார். விவசாயிகள் காரின் மீது கற்களை கொண்டு எறிந்ததாகவும் அதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும், இதனையடுத்து காரின் அடியில் சிலர் சிக்கியதால் உயிரிழப்பு நேரிட்டதாகவும் இந்த தாக்குதலில் பாஜகவினர் 3 பேர் மற்றும் கார் ஓட்டுநர் உயிரிழப்பதாகவும் தனது மகனும் தானும் சம்பவம் நடந்த இடத்தில் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கார் மோதி உயிரிழந்த விவசாயியை குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று கிளம்பினார். அவர் காரில் லக்கின்பூர் என்ற பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த போது காவல்துறையினர் அவரை தடுத்ததாகவும் ஆனால் காவல்துறையினரின் மீறி விவசாயி குடுமப்த்தினரை சந்திக்க பிரியங்கா காந்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி பனிப்பூர் என்ற கிராமத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியானதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version