இந்தியா

திடீரென தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி அதிரடி கைது!

Published

on

உத்தரப்பிரதேச கிழக்கு பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி சோன்பத்ராவில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் காவல்துறை பிரியங்கா காந்தியையும், அவருடன் தர்ணாவில் ஈடுபட்டவர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் சோன்பத்ராவில் சொத்து தகராறில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி சென்றுள்ளார். அப்போது பிரியங்கா காந்தியை காவல்துறையினர் தடுத்து அங்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் பிரியங்கா காந்தி என்னுடன் நான்குபேரை மட்டும் அழைத்து செல்கிறேன் என கூறி அனுமதி கேட்டுள்ளார். ஆனாலும் காவல்துறை அதற்கு அனுமதி மறுத்துள்ளது.

இதனையடுத்து அவர்களுடன் வாக்குவதத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி என்னை அனுமதிக்கும்வரை நாங்கள் இங்கு அமைதியாக அமர்ந்துகொள்வோம் என கூறி தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து பிரியங்கா காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version