சினிமா செய்திகள்

மும்பை வீட்டை விற்ற பிரியங்கா சோப்ரா… ராசியான வீடு என போட்டிபோட்ட பாலிவுட் நடிகைகள்!

Published

on

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய மும்பை வீட்டை விற்க முடிவு செய்த போது ராசியான வீடு என இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பாலிவுட் நடிகைகள் அந்த வீட்டை வாங்கப் போட்டி போட்டுள்ளார்கள்.

தமிழில் ‘தமிழன்’ திரைப்படம் மூலம் சினிமாத் துறையில் அறிமுகம் ஆன நடிகை பிரியங்கா சோப்ரா அடுத்தடுத்து பாலிவுட், ஹாலிவுட் என இன்று சர்வதேச நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை உரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

இதனால் மும்பையில் உள்ள தனது வீட்டை விற்க முடிவு செய்தார் பிரியங்கா. பிரியங்காவின் மும்பை ஜூஹு பங்களா வீடு விற்பனைக்கு வருகிறது என்றதும் ராசியான வீடு என சில நடிகைகள் வீட்டை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு சென்ற ராசியைத் தான் வீட்டில் பார்த்துள்ளனர் போல.

கடைசியாக பிரியங்காவிடம் நேரடியாகவே பேசி தனக்குத்தான் அந்த ராசியான பங்களா வீட்டை விற்க வேண்டும் என அடம் பிடித்து வாங்கியுள்ளார் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். தற்போது பிரியாங்காவிடம் இருந்து 7 கோடி ரூபாய்க்கு வீடு ஜாக்குலினிடம் கைமாறி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version