செய்திகள்

பிரியங்கா சோப்ராவை பின்னுக்கு தள்ளிய பிரியா பிரகாஷ் வாரியர்.!

Published

on

2018 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் முதல் இடம் பிடித்துள்ளார். தற்பொழுது கூகுள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினால் மறுபடியும் பிரியா பிரகாஷ் வாரியர் இன்னும் அதிகமாகப் பிரபலமடைந்து வருகிறார்.

கூகுள் நிறுவனம் அண்மையில் நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக முதல் இடத்தைப் பிடித்துள்ள பிரபலத்தின் பெயரை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்த மலையாள நடிகை “பிரியா பிரகாஷ் வாரியர்” இன் பெயர் ஹட்டன் முதல் இடத்தைப்பிடித்துள்ளது.

ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் ஒன்றில் பிரியா வாரியர் கண் அடிக்கும் காட்சி இணையம் முழுதும் வைரல் ஆகியது. மியூசிக்கலி மற்றும் டிக் டாக் போன்ற தளத்திலும் இவரின் நடிப்பை மற்றவர்களும் பின்பற்றி பதிவிட்டனர். 2018ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியர் உடன் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் அடுத்தடுத்த இடத்திலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version