இந்தியா

பொருளாதாரம் பஞ்சராகிவிட்டது: பிரியங்கா காந்தி ஆவேசம்!

Published

on

இந்தியாவின் ஜிடிபி சதவீதம் 5 சதவீதமாக குறைந்துள்ளதை அரசியல் கட்சியினர் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

2019-20 ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் கணக்கு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி கடும் சரிவைச் சந்தித்துள்ளது. முந்தைய காலாண்டில் 5.8% என்ற அளவில் இருந்து ஜிடிபி 5 சதவிகிதமாக சரிவைச் சந்தித்துள்ளது. இது 7 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் சரிவாக பார்க்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் இதான் இந்த ஜிடிபி சரிவிற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், நல்ல காலம் பிறக்கும் என்று பாஜக அரசு கூறிவந்த நிலையில், பொருளாதாரம் பஞ்சராகிவிட்டது என்பதை ஜிடிபி புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

ஜிடிபியும் வளர்ச்சி அடையவில்லை. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயரவில்லை. வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்ல யார் பொறுப்பேற்பது என்பதை தெளிவுபடுத்துங்கள் என கடுமையாக சாடியுள்ளார் பிரியங்கா காந்தி.

Trending

Exit mobile version