சினிமா

பாஜகவில் இணையப்போகிறாரா செம்பருத்தி சீரியல் அகிலாண்டேஸ்வரி என்னும் பிரியா ராமன்?

Published

on

இந்தியா முழுமைக்கும் பாஜக காலூன்றி வலுவாக இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் அது முடியாத காரியமாகவே உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட இந்தியா முழுமைக்கும் 303 இடங்களை கைப்பற்றிய பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட வெறும் 4 தொகுதிகளில் கூட படுதோல்வியை சந்தித்தது.

இது தமிழக பாஜக மீது தேசிய பாஜகவுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பாஜக தலைமை பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அதில் ஒரு பகுதியாக பாஜகவை வலுப்படுத்த தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த களமிறங்கியுள்ளது பாஜக. இதற்காக பாஜக பொறுப்பாளர்கள், தலைவர் தமிழிசை, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

குறிப்பாக பிரபலமாக உள்ளவர்களை கட்சியில் சேர்த்து கட்சியை பலப்படுத்த நினைக்கிறது பாஜக. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் பிரபலமான சீரியலான செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பிரியா ராமன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இவர் மிகவும் பிரபலமான சீரியர் நடிகையாக வலம் வருகிறார். இவர் ரஜினி இயக்கத்தில் வெளிவந்த வள்ளி, சூரியவம்சம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சில சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version