பிற விளையாட்டுகள்

இந்தியாவுக்குத் தங்க பதக்கம்.. மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் சாதனை!

Published

on

டோக்கியோவில் ஓலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஹங்கேரியில் நடைபெற்று வரும் ஜூனியர் லெவல் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரியா மாலிக் தங்கம் வென்றுள்ளார்.

ஹங்கேரியில் ஜூனியர் லெவல் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பாகப் பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனையுடன் மோதினார்.

போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆவேசமாகவும், சாதுரியமாகவும் விளையாடிய பிரியா மாலிக் 5-0 என கணக்கில் வெற்றிபெற்று, இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலும்பிக் போட்டியில், பளுதூக்கும் போட்டியில் மீரா பாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

பிரியா மாலிக்கின் சாதனையை இந்தியர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version