சினிமா
பரத்துடன் இணைந்த பிரிய பவானி சங்கார் ஒரு வலைத்தளத் தொடரில் நடித்து வருகிறார்!
நடிகை பிரிய பவானி சங்கார் புதிதாக நடிகர் பரத்துடன் இணைந்து ஒரு வலைத்தளத் தொடரில் நடித்து வருகிறார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர், பின்னர்ச் சின்னதிரை தொடரில் ஜொலித்தார். அடுத்து மேயாத மான் படத்தில் அறிமுகமான ப்ரியா, கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்திருந்தார். தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார்.
தொலைக்காட்சி, சின்னதிரை நடிகை, திரைப்பட நடிகை எனப் பல முகங்களைக் கொண்டிருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ப்ரியா பவானி சங்கரிக்கு எனப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் புதிய ஒரு வலைத்தளத் தொடரில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பரத்துடன் இணைந்து நடித்து வருவதாகவும், அது அமோசான் பிரைமில் வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.