சினிமா செய்திகள்

தினமும் ஒரு படத்தில் கமிட் ஆகும் நடிகை பிரியா பவானி சங்கர்..!

Published

on

நடிகை பிரியா பவானி சங்கர் தினம் ஒரு படம் என்ற கணக்கில் மிக வேகமாக தன் வசம் படங்களைக் கவர்ந்து வருகிறார்.

இன்று தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இந்த சூழலில் நேற்று நடிகை சிம்புவின் பத்து தல படத்தில் அவருக்கு ஜோடி ஆக ஒப்பந்தமானார் பிரியா பவானி சங்கர். அடுத்ததாக இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தில் அவருக்கு ஜோடி ஆக கமிட் ஆகியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2, பொம்மை, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, வான், அசோக் செல்வன் உடன் பெயர் அறிவிக்கப்படாத படம் என வரிசையாக வெளியீட்டுக்குப் படங்கள் உள்ளன. இதுபோக புது பட அறிவிப்புகள் கடந்த ஒரு வாரமாக தினம் ஒன்று என வெளியாகிக் கொண்டே உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version