சினிமா செய்திகள்

அருண் விஜய்க்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்!

Published

on

செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமானார். பின்னர், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் அத்தை மகளாக நடித்திருந்த பிரியா பவானி சங்கருக்கு சமீபத்தில் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆக அமைந்தது.

இந்நிலையில், தற்போது, லைகா நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள மாஃபியா படத்தில் நாயகியாக கமீட் ஆகியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

படத்தின் பூஜை சென்னையில் நேற்று போடப்பட்டது. அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் ஷேர் செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version