சினிமா செய்திகள்

திமுகவுக்கு வாழ்த்து சொன்ன பிரியா பவானி சங்கர்; ட்ரோல் செய்ய நினைத்த நெட்டிசன்ஸ்; அடுத்து நடந்தது…

Published

on

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ஆளுங்கட்சியான அதிமுக, 66 இடங்களில் வெற்றியடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பதவியேற்க உள்ளார். இதையொட்டிப் பல்வேறு தரப்பினரும் ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர், ‘நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக் கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்’ என்றார்.

அதற்குப் பலரும் அவரை ட்ரோல் செய்தனர். குறிப்பாக அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமுருகன் காந்தி, கைது செய்யப்பட்ட போது எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘திருமுருகன் காந்தியை விடுதலை செய்’ எனப் பகிர்ந்திருந்தார். அதற்கு ஒரு ட்விட்டர்வாசி, ‘அடடே மேடம் நீங்களே திருட்டு திராவிட சொம்பு தான?’ எனக் கேட்டிருந்தார்.

அதற்கு ரிப்ளை செய்திருந்த பிரியா, ‘This cracked me up பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான் இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்’ என பதிலடி கொடுத்துள்ளார்.

இன்னொருவர், ‘சகோதரி முதல்வரை நேரடியா மக்கள் தேர்ந்தெடுக்கவே முடியாது… அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம்..2016 ல ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர். அப்புறம் முதல்வர் இறந்தால் ஆட்சி கவிழ்க்கனும்னு சட்டமும் கிடையாது’ எனக் கேட்க,

‘take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை’ என்று மீண்டும் பதிலடி கொடுத்து கதறவிட்டார்.

இன்னும் பலரது கமென்டுகளுக்கு பிரியா, தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதும் அது வைரலாகியும் வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version