சினிமா செய்திகள்

பிரியா பவானி சங்கர் காட்டில் மழை!

Published

on

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வந்த பிரியா பவானி சங்கர், வைபவ் நாயகனாக நடித்த மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் இரண்டாவது நாயகி அத்தை பெண் கதாபாத்திரத்தில் சின்ன ரோலில் அதன் பின்னர் நடித்திருந்தார். தற்போது, எஸ்.ஜே. சூர்யாவின் மான்ஸ்டர் மற்றும் குருதி ஆட்டம் படங்கள் அவர் நடிப்பில் ரிலீசுக்கு ரெடியாகி விட்டன.

மேலும், அருள்நிதி மற்றும் ஜீவா நடிக்கும் புதிய படம் ஒன்றிலும், மலையாள நடிகர் துல்கர் சல்மானுடன் ஒரு படத்திலும் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த 2019ம் ஆண்டு பிரியா காட்டில் அதிர்ஷ்ட மழை என்றால் அது மிகையாகாது. மேலும், பெரிய ஸ்டார் படங்களில் நடிக்க பிரியா பவானி சங்கர் முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

Trending

Exit mobile version