சினிமா

பிக்பாஸ் வீட்டுக்கு போகும் பிரியா பவானி சங்கர்… ரசிகர்கள் குஷி…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 துவங்கியுள்ளது. இதில் 17 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசனே நடத்தி வருகிறார். எவிக்‌ஷன் பிராசஸ் துவங்கிய பின்னர்தான் நிகழ்ச்சி சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவிருக்கிறார். ஆனால், போட்டியாளராக அல்ல. விருந்தினராக. அதாவது, ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து ‘ஓ மணப்பெண்ணே’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகி 22ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, இப்படத்தை புரமோட் செய்யும் விதமாகவே ஹரிஸ் கல்யாணும், பிரியா பவானி ஷங்கரும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லவுள்ளனர். பிரியா பவானி ஷங்கர் சினிமாவில் நடிப்பதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version