சினிமா செய்திகள்

பிடித்த நடிகருக்கு உருகி உருகி ‘லவ் யூ’ சொல்லும் பிரியா பவானி சங்கர்..!

Published

on

நடிகை பிரியா பவானி சங்கர் தனக்குப் பிடித்த நடிகரின் பெயரைக் கேட்டாலே உருகி விடுவார். பல நிகழ்ச்சிகளிலும் இந்தக் காட்சி நடந்துள்ளது.

நடிகை பிரியா பவானி சங்கருக்கு மிகவும் பிடித்த நடிகர் மாதவன். மாதவன் தான் தன்னுடைய ஹீரோ எனப் பல நிகழ்ச்சிகளிலும் பொது வெளியிலேயே உருகியுள்ளார் நடிகை பிரியா. இந்த சூழலில் சமீபத்தில் நடிகர் மாதவனின் மாறா திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.

இந்தப் படத்துக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர், மாதவனுக்கு உருகி உருகி லவ் யூ சொல்லியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கதில் நடிகை பிரியா பவானி சங்கர், “நூறாவது முறையாக சொல்கிறேன் ஐ லவ் யூ, வி லவ் யூ, எல்லோரும் உங்களைக் காதலிக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, உங்களது பணியின் மூலம் நிறைய நாட்களும் உங்களால் மட்டும் பல நாட்களும் வாழ்க்கை அழகாக தெரிகிறது, அழகானதாக உணரப்படுகிறது” எனக் குறிப்பிட்டு மாறா படத்துக்கும் மாதவனுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version