தமிழ்நாடு

வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு மக்கள் விரோதமானது – கொந்தளித்த செல்லூர் ராஜூ

Published

on

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு சொல்லும் விஷயம் மக்களுக்கு விரோதமான வகையில் உள்ளது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் படி தான், பொதுத் துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்படி இருக்கும் நிலையில், அவற்றில் சிலவற்றைத் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, மக்கள் விரோதமாகத் தான் உள்ளது.

குறிப்பாக மத்திய அரசின் அறவிப்பில் உள்ள சில சரத்துகளில் தெளிவு இல்லை. இது குறித்து மத்திய அரசு அடுத்த என்ன நடவடிக்கை என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அங்கு எப்படி இது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அதிமுக தரப்பில், இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட பாஜக அரசின் மத்திய பட்ஜெட்டை பலரும் வரவேற்றுப் பேசியுள்ள நிலையில், அதற்கு எதிராக கருக்கு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

 

Trending

Exit mobile version