இந்தியா

தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது: தனியார் மருத்துவமனைகளுக்கு கிடுக்கிப்பிடி!

Published

on

தனியார் மருத்துவமனைகள் இதுவரை நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் தடுப்பூசிகளை தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 1 முதல் தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய முடியாது என்றும் தடுப்பூசி வாங்குவதற்கு கோவின் இணையதளத்தில் தனியார் மருத்துவமனைகள் முதலில் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்பின் இணையதளம் வழியாக தடுப்பூசி வாங்குவதற்கு ஆர்டர் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இனி தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு தனியாக அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

கோவின் இணையதளத்தில் ஆர்டர் செய்த மூன்று நாட்களுக்குள் ஆன்லைன் மூலம் தனியார் மருத்துவமனைகள் ஆர்டர் செய்வதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள மத்திய அரசு இந்த வழிமுறையின் படி தான் இனி தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version