தமிழ்நாடு

கொரோனா மரணத்திற்கு தனி இறப்பு சான்றிதழ்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது கட்டாயம் என மத்திய அரசுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தான் இறந்தார் என்பதற்கான சான்றிதழ் வேண்டும் என்பது உறுதியாகிறது.

இதனை அடுத்து இறப்புச் சான்றிதழில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு வேறு வகையில் இறந்ததாக இறப்பு சான்றிதழ் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் கொரோனாவால் மரணம் என்று குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் அதனால் அவர்கள் பின்னாளில் நிவாரணம் பெற உதவியாக இருக்கும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் கொரோனா மரணத்திற்கு என தனி இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இறப்பு சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடப்படுவது இல்லை என்றும் ஆனால் தமிழகத்தில் தேவைப்பட்டால் கொரோனாவால் மரணம் என தனியாக இறப்பு சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி நிவாரணம் பெறுவதற்கு இறப்பு சான்றிதழில் கொரோனாவால் இறந்தார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதால் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version