தமிழ்நாடு

பேருந்துகள் இயங்காது: திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிருப்தி!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து பேருந்துகள் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை படிப்படியாக திரும்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கி வருகிறது. ஒரு சில பகுதிகளில் இதே விதி முறையை கடைபிடித்து தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என்று அம்மாவட்டத்தின் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி என்பவர் தெரிவித்துள்ளார். 100 சதவீத பயணிகளுக்கு அரசு அனுமதி அளித்தவுடன் தான் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கும் அது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலும் தனியார் பேருந்துகளில் தான் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர் என்பதால் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என்ற முடிவு பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் இன்னும் ஒரு சில வாரங்களில் தானே 100 சதவீத பயணிகள் பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விரைவில் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயங்கும் என்று கூறப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version