உலகம்

இளவரசி டயானா அணிந்த கவுன் ஏலம் போனது இத்தனை கோடிக்கா?

Published

on

இளவரசி டயானா அணிந்த கவுன் சமீபத்தில் ஏலம் விடப்பட்ட நிலையில் கோடிக்கணக்கில் அந்த கவுன் ஏலம் போனது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி டயானா அணிந்த ஊதா நிற கவுன் சமீபத்தில் ஏலம் விடப்பட்டதாகவும் இந்த கவுனை 6 லட்சம் டாலருக்கு தொழில் அதிபர் ஒருவர் ஏலம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

நடமாடும் ஃபேஷன் ஷோ போல் வாழ்ந்தவர் இளவரசி டயானா, 1997 ஆம் ஆண்டு புகழ்பெற்ற வேனிட்டி ஃபேர் போட்டோஷூட்டிலும், 1991 இல் இளவரசி மார்கரெட்டின் கணவர் லார்ட் ஸ்னோடனால் எடுக்கப்பட்ட அரச உருவப்படத்திலும் இந்த கவுனை அணிந்திருந்தார் என செய்திகளின் மூலம் தெரிய வருகிறது.

பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளர் விக்டர் எடெல்ஸ்டீன் என்பவர் டிசைன் செய்த இந்த கவுன், ஊதா நிறத்தை கொண்டது. இந்த கவுனை அவர் டயானாவுக்காக செய்ததாக கூறப்படுகிறது. இந்த கவுன் குறித்து ஒரு பேட்டியில் விக்டர் கூறியபோது, ‘நான் இந்த ஆடைகளை அவருக்காக வடிவமைக்கத் தொடங்கியபோது சிறுமியின் ஆடைகள் பெரிதாக்கப்பட்டதைப் போல உணர்ந்தேன்’ என்று அவர் கூறினார். மேலும் இந்த கவுன் மிகவும் நேர்த்தியான மற்றும் அதிநவீனமானது’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜூன், 1997ஆம் ஆண்டு எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக டயானா தனது 80 ஆடைகளை விற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின் அவரது ஆடை இப்போதுதான் ஏலம் விடப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version