இந்தியா

இயற்கை  எரிவாயு குழாய் திட்டம் – பிரதமர் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

Published

on

கொச்சி-மங்களூர் இயற்கை  எரிவாயு குழாய் திட்டத்தை காணொளி வாயிலாக பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ஒரே நாடு ஒரே எரிவாயு கட்டமைப்பு என்ற திட்டத்தின் முன்னோடியாக இயற்கை  எரிவாயு குழாய் என்ற திட்டம் பறைசாற்றப்படுகிறது.
இதன் மதிப்பீடு ரூ3000 கோடி ஆகும்.  12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இந்த திட்டத்திற்காக உழைத்து உள்ளனர்.

இத்திட்டம் மூலமாக 450 கிமீ தொலைவிற்கு எவ்வித தடையும் இன்றி இயற்கை எரிவாயு சப்ளை செய்ய முடியும். இதன் முதற்கட்டமாக கொச்சியில் இருந்து பாலக்காடு, கோழிக்கோடி, திருச்சூர், எர்ணாகுளம், கண்ணுர், மலப்புரம் வழியாக இந்த எரிவாயு குழாய் செல்கிறது.

இவ்வாறு குழாய் மூலமாக கேஸ் சப்ளை மூலம், ஒரே நாளில் 12 மில்லியன் மெட்ரிக் கியூபிக் அளவிலான இயற்கை எரிவாயுவை அனுப்ப முடியும். இயற்கை சுற்றுசூழலுக்கு  எந்த பதிப்பும் இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயுவை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2014 அம் ஆண்டிற்கு பிறகு முழுவீச்சில் பணிகள் நடைபெற்றன.

Trending

Exit mobile version