இந்தியா

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தார் பிரதமர் மோடி!

Published

on

தற்போது திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் “தி கேரள ஸ்டோரி” திரைப்படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தி கேரள ஸ்டோரி

இந்தி இயக்குநரான சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் கேரளாவில் இருந்து 32,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்றும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது கேரள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என, கேரள அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இந்தப் படம் கடுமையான எதிர்ப்புக்கும் இடையே கேரளத் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி ஆதரவு 

இந்நிலையில், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், “தீவிரவாதம் எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதனை தி கேரள ஸ்டோரி திரைப்படம் நன்றாக காட்டுகிறது.

இந்தப் படத்தை தான் தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி போராடி வந்தது. இந்தப் படத்தை தடை செய்ய முயற்சி செய்வதன் மூலம், பயங்கரவாதத்தை பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் ஆதரவு ஆதரவு அளிக்கிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version