இந்தியா

‘நண்பேன்டா’ – மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது கொடுத்த டிரம்ப்!

Published

on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘லீஜியன் ஆஃப் மெரிட்’ என்கிற விருதை வழங்கி கவுரவித்துள்ளார். இதன் மூலம் இரு நாட்டு உறவில் மேலும் முன்னேற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட விருதை, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர், தரண்ஜித் சிங் சாது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரியனிடமிருந்து பெற்றுக் கொண்டார். இது குறித்து ஓபிரியன், ‘அமெரிக்க – இந்திய இரு நாட்டு உறவை வலுப்படுத்திய காரணத்திற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு லீஜியன் ஆஃப் மெரிட் விருது வழங்கினேன்’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு விருது அளித்தது போலவே, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருக்கும் லீஜியன் ஆஃப் மெரிட் விருதை வழங்கினார் அதிபர் டிரம்ப்.

seithichurul

Trending

Exit mobile version