உலகம்

எனக்கு அதிபர் பதவி வேணும்.. அடம் பிடிக்கும் டிரம்ப்

Published

on

அமெரிக்க அதிபர் பெறுவதற்காக கடைசி வரையில் போராடப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றார். இருப்பினும் டிரம்ப் அந்த தேர்தல் முடிவை ஏற்க முடியாது என்றும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அதிபர் பதவி வேண்டும், அதுவரையில் சும்மா இருக்க மாட்டேன் என்பது போல பேசியுள்ளார். முன்னதாக ஜார்ஜியா மாகாணத்தில், செனட் மன்ற உறுப்பினருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்றும், அதிபர் பதவியை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன், அதை அடையாமல் விடமாட்டேன் என்றார்.

மேலும், ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்குள் நுழைய விடப்போவதில்லை என்றும் அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என, குடியரசு கட்சியினர் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version