இந்தியா

வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் மேல் வரி கட்டுகிறேன்: சொந்த ஊரில் ஜனாதிபதி பேச்சு!

Published

on

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சமீபத்தில் சிறப்பு ரயில் மூலம் தனது சொந்த கிராமத்திற்கு சென்றார் என்பதும் முன்னாள் ஜனதிபதி அப்துல்கலாமுக்கு அடுத்தபடியாக ரயிலில் சென்ற ஜனாதிபதி இவர்தான் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தனது சொந்த ஊரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது தான் வாங்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் நாட்டிற்கு வரியாக செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘தான் ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் அதில் மாதம்தோறும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரியாக காட்டுவதாகவும் இதிலிருந்துதான் வாங்கும் சம்பளத்தில் இருந்து பாதிக்குமேல் வரி கட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார், தேசத்துக்கு வரி செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை என்று கூறிய ஜனாதிபதி, நாம் செலுத்தும் வரியின் மூலம் தான் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் கூறினார்

மேலும் சமீபத்தில் தனது சொந்த கிராமம் அருகே ரயில் நிறுத்தப்படவில்லை என்பதற்காக ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த ராம்நாத் கோவிந்த் அவர்கள், இதனால் யாருக்கு இழப்பு என்பதை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

seithichurul

Trending

Exit mobile version