தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி படம்: ஜனாதிபதி திறந்து வைத்தார்.

Published

on

தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி திருவுருப்படத்தை திறந்துவைக்க இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சென்னை வந்த நிலையில் சற்று முன் அவர் தமிழக சட்டசபையில் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்

முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக இருந்தார் என்பதும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார் என்பதும் ஒரு தோல்வியை கூட அவர் வாழ்வில் சந்திக்கவே இல்லை என்பதும் தொடர்ச்சியாக அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திரு உருவ படம் திறப்பு விழா ஆகியவை இன்று நடந்தது. இதற்காக குடியரசுத் தலைவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று மதியம் சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் சற்றுமுன் சட்டப்பேரவையில் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதியின் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் நன்றி வணக்கம், ஜெய் ஹிந்,த் ஜெய் தமிழ்நாடு என்று முழங்கி தனது உரையை நிறைவு செய்தார்

முன்னதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பேசிய போது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது என்றும் நாட்டிற்கு பல முன்னோடி திட்டங்களை உருவாக்கித் தந்தது தமிழ்நாடு சட்டமன்றம் என்றும் வரலாற்றில் இன்று முக்கியமான நாள் என்றும் அவர் பேசினார். ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version