செய்திகள்

கருணாநிதியை சந்தித்த குடியரசுத் தலைவர்.. தமிழில் வாழ்த்தி டிவிட்

Published

on

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இன்று மதியம் இந்த சந்திப்பு நடந்தது. குடியரசுத்தலைவர் விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அவர் காவேரி மருத்துவமனைக்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க வந்தார்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததும் உடனடியாக மீண்டும் டெல்லி கிளம்பினார். கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.

இது சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட் செய்துள்ளார், ”திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.” என்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version