இந்தியா

ராமர் கோயில் கட்டுமானத்திற்கு 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார் ஜனாதிபதி!

Published

on

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,100 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் நகரம் முதல் கிராமங்கள் வரையில் சென்று, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது. வரும்  பிப்ரவரி 27  ஆம் தேதிக்குள் நிதித்திரட்டும் பணிகள் முடிவடைகின்றன.

நேரடியாக மக்களைச் சந்தித்தும், ஆன்லைன் தளம் மூலமாகவும் நிதி திரட்டப்பட்டு வருகின்றன. 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்தும் மக்களிடம் காசோலை மூலமாக பெறப்படுகின்றன. அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆன்லைன் நன்கொடை தளம் மூலமாக இதுவரையில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது பங்கிற்கு  5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். விராமர் கோயில் கட்டுமான இயக்கத்தின் அமைப்பினர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தனர். அப்போது 5 லட்சம் ரூபாய் குடியரசுத்தலைவர் வழங்கினார்.

Trending

Exit mobile version