இந்தியா

மீண்டும் திறப்பு: டெல்லி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Published

on

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவுள்ளதை அடுத்து டெல்லி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கொரோனா பாதிப்பு காரணமாக பல சுற்றுலா தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து, குறிப்பாக தலைநகர் டெல்லியில் குறைந்து வருவதை அடுத்து ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட உள்ளன. காலை 10.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரையிலான முன்பதிவு செய்யப்பட்ட மூன்று நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 25 பேர் என ஜனாதிபதி மாளிகையில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர்

மேலும்செவ்வாய் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஆறு நாட்களில், காலை 9.30 முதல் 11 மணி வரை, காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரையிலான முன்பதிவு செய்யப்பட்ட நான்கு நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 50 பேருக்கு ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்திற்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

எனவே டெல்லி செல்லும் சுற்றுலா பயணிகள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தை வரும் ஆகஸ்ட் 1 முதல் கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version