தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்!

Published

on

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவர்கள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த இடமாற்றத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பாலாஜி இடமாற்றத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சற்று முன் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சற்றுமுன் ஒப்புதல் வழங்கியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவர்கள் பதவி ஏற்று 10 மாதமே ஆகியுள்ள நிலையில் திடீரென இடமாற்றத்திற்கு காரணம் என்ன என அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் ஜனாதிபதியின் இந்த ஒப்புதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version