சினிமா செய்திகள்

பிரேம்ஜிக்கு மேரேஜ்… குஷியில் ரசிகர்கள்!

Published

on

அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கமெடி நடிகராக அறிமுகமானவர் பிரேம்ஜி, தொடர்ந்து பல வெங்கட் பிரபு படங்களில் நடித்த வந்த பிரேம்ஜி, சில வேறு இயக்குநர்கள் படங்களிலும் காமெடியனாக நடித்துள்ளார்.

பல வருடங்கள் கடந்தும் பிரேம்ஜி இதுவரை முரட்டு சிங்கிளாகவே இருந்து வந்தார். தொடர்ந்து ரசிகர்கள் எப்போ மேரேஜ் என கேட்டு டார்ச்சர் பண்ணி வந்த நிலையில், அவர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக தற்போது,

டி-சர்ட்டில் மணக் கோலத்தில் உள்ள பொம்மைகளுக்கு கீழ் கேம் ஓவர் என அச்சிடப்பட்டிருப்பதை காட்டி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகரக்ள், பிரேம்ஜிக்கு மணப்பெண் கிடைத்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் ஆகவுள்ளதை தான் குறிப்பால் உணர்த்துகிறார் என புரிந்து கொண்டு வாழ்த்தி வருகின்றனர்.

சீக்கிரம் பொண்ணு யாரு, திருமண நாள் எப்போன்னு சொல்லுங்க பிரேம்ஜி!

seithichurul

Trending

Exit mobile version