தமிழ்நாடு

தேமுதிக தலைவர் ஆகின்றாரா பிரேமலதா? விஜயகாந்துக்கு என்ன பதவி?

Published

on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் இருப்பதால் தேமுதிக தலைவர் பதவியை பிரேமலதா ஏற்க இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அந்த தேர்தல் பணிகளை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா அவர்கள் தான் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே தேமுதிக தலைவர் பதவியை பிரேமலதா ஏற்பார் என்றும் அவருக்கு கூட்டணி உள்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் அதிகாரம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் தேமுதிக வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது தேமுதிகவின் தலைவராக விஜயகாந்த் தான் இருப்பார் என்றும் ஆனால் பிரேமலதா செயல் தலைவராக பொறுப்பு ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தேமுதிக பொருளாளராக பதவி வகித்து வரும் பிரேமலதா அவர்கள் செயல் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள்பட வருங்காலத்தில் வரும் தேர்தல் அனைத்திலும் பிரேமலதா அவர்கள்தான் முடிவு எடுப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version