தமிழ்நாடு

மகளிர் பேறுகால விடுமுறை மாதங்கள் உயர்வு: தமிழக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானதை அடுத்து இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டிலும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 என்ற திட்டம் உள்பட பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக பேறுகால விடுமுறை மாதங்கள் 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு பணிகளில் இருக்கும் மகளிருக்கு பேறுகால விடுமுறை இதுவரை 9 மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பணிகளில் இருக்கும் மகளிர்களுக்கு பேறுகால விடுமுறை கூடுதலாக மூன்று மாதங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பேறுகால இறப்பு விகிதத்தை குறைக்கும் திட்டத்திற்கு ரூபாய் 959 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பேறுகால விடுமுறை மாதங்கள் 9-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டதை அடுத்து அரசு பணியில் இருக்கும் பெண்கள் தமிழக அரசுக்கு தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version